ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மகளிர் ஒலிம்பிக் தகுதிச் சுற்று-2 அறிவிப்பு....!!


ஆசிய கால்பந்து கூட்டமைப்பு  மகளிர் ஒலிம்பிக் தகுதிச் சுற்று-2 அறிவிப்பு....!!
x

2024-ல் பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் மகளிர் கால்பந்திற்கான 2-வது தகுதி சுற்று ஆட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

டெல்லி,

33-வது ஒலிம்பிக் தொடர் பாரீசில் நடைபெற உள்ளது.அதில் பங்கேற்கும் ஆசிய மகளிர் கால்பந்து அணிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.முதலாவது தகுதிச் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது சுற்றிற்கான அறிவிப்பை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதில் பங்கேற்கும் அணிகள் 3-பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.தங்களது பிரிவுகளில் முதலிடம் மற்றும் 2-ம் இடம் பிடிக்கும் அணிகள் 2024 பிப்ரவரி மாதம் நடக்கும் 3-வது தகுதிச் சுற்றிற்கு முன்னேறும்.

தரவரிசையில் 60-வது இடத்தில் உள்ள இந்திய அணி முதலாவது தகுதிச் சுற்று ஆட்டங்களில் கிர்கிஸ் மற்றும் பிஷ்கேக் அணிகளை விழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளது.2-வது சுற்றில் ஜப்பான்,வியட்நாம் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் 'சி'பிரிவில் இடம் பெற்றுள்ளது.

இந்திய அணியின் ஆட்டங்கள் பின்வருமாறு;

அக்டோபர் 26; ஜப்பான் -இந்தியா

அக்டோபர்29; வியட்நாம்-இந்தியா

நவம்பர்1; உஸ்பெகிஸ்தான் -இந்தியா.

இந்தியா மூன்று போட்டிகளில் ஆட உள்ளது.


Next Story