ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஈஸ்ட் பெங்கால் - மும்பை அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஈஸ்ட் பெங்கால்  - மும்பை  அணிகள் இன்று மோதல்
x

Image Tweet : @IndSuperLeague

இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற உள்ள ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - மும்பை சிட்டி அணிகள் மோத உள்ளன.

கொல்கத்தா ,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற உள்ள ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - மும்பை சிட்டி அணிகள் மோத உள்ளன.

மும்பை அணி 12 போட்டிகளில் 6 வெற்றி , 4 டிரா , 2 தோல்வி என புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. ஈஸ்ட் பெங்கால் 12 போட்டிகளில் 2 வெற்றி , 6 டிரா , 4 தோல்வி என புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.


Next Story