ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து


ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து
x
தினத்தந்தி 24 Nov 2017 8:30 PM GMT (Updated: 2017-11-25T01:26:21+05:30)

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி கெவ்லோன் நகரில் நடந்து வருகிறது.

கெவ்லோன்,

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி கெவ்லோன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3–வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 2–ம் நிலை வீராங்கனையான அகானே யமாகுச்சியுடன் (ஜப்பான்) மோதினார். 37 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21–12, 21–19 என்ற நேர்செட்டில் அகானே யமாகுச்சியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். கடந்த மாதம் நடந்த பிரெஞ்ச் ஓபன் போட்டியில் அகானே யமாகுச்சியிடம் கண்ட தோல்விக்கு சிந்து நேற்று பதிலடி கொடுத்தார். அரைஇறுதியில் பி.வி.சிந்து, 6–ம் நிலை வீராங்கனை ராட்சனோக் இன்டனோனை (தாய்லாந்து) எதிர்கொள்கிறார்.


Next Story