விம்பிள்டன் டென்னிஸ்; 3-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்


விம்பிள்டன் டென்னிஸ்; 3-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்
x

Image Courtesy : ANI

நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் தனாசி கோக்கினாகிசை வெளியேற்றி 3-வது சுற்றை எட்டினார்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் தனாசி கோக்கினாகிசை (ஆஸ்திரேலியா) வெளியேற்றி 3-வது சுற்றை எட்டினார்.

ஜோகோவிச் அடுத்து சக நாட்டவர் கெக்மனோவிச்சை சந்திக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் யுகோ ஹம்பெர்ட் 3-6, 6-2, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் 6-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட்டுக்கு (நார்வே) அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.


Next Story