கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு பீட்டா அமைப்பு வழங்கிய சிறப்பு விருது

விலங்குகள் நல அமைப்பு என்ற பீட்டா கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு சிறப்பு விருது வழங்கி உள்ளது.

Update: 2017-01-16 09:17 GMT
விலங்குகள் நல அமைப்பு என்று கூறிக்கொண்டு செயல்பட்டு வரும் வெளிநாட்டு அமைப்பு பீட்டா. இது மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்பவர்களையோ, வெளிநாட்டில் இருந்து கோழிகளை பொறித்து விற்பனை செய்பவர்களையோ கண்டு கொள்ளவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பாரம்பரியமாக நடந்து வந்த ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்குவதில் முக்கிய பங்கு வகித்தது. எனவே,  இந்த அமைப்புக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

விலங்கு-பறவைகளுக்கு பாதுகாவலன் என்று சொல்லும் பீட்டா அமைப்புக்கு பிரபல நடிகர், நடிகைகள் பலர் ஆதரவு அளித்து வருகிறார்கள். இதன் விளம்பர தூதுவர்களாக இருக்கிறார்கள். இதுபோல் பீட்டா அமைப்பை ஆதரித்து வருபவர் இந்தி கவர்ச்சி நடிகை சன்னி லியோன்.  இவர் பீட்டா அமைப்பின் பல்வேறு விளம்பரங்களில் நடித்து இருக்கிறார். அவரது பங்களிப்பை கருத்தில் கொண்டு சன்னி லியோனுக்கு இந்த ஆண்டுக்கான சிறப்பு விருதை பீட்டா அமைப்பு வழங்கி இருக்கிறது. இதை சன்னி லியோன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு பெருமைப்பட்டிருக்கிறார். என்ன கொடுமை இது.

மேலும் செய்திகள்