சூதாட்ட வழக்கு விசாரணைக்கு செல்லாமல் பட புரோமோசனில் கலந்துகொண்ட தமன்னா

சூதாட்ட வழக்கு விளம்பரத்தியதற்காக நடிகை தமன்னா இன்று நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், விசாரணைக்கு செல்லாமல் பட புரோமோஷனில் கலந்து கொண்டிருக்கிறார் தமன்னா.

Update: 2024-04-29 15:02 GMT

மகாதேவ் பந்தய செயலியை விளம்பரத்தியதற்காக நடிகை தமன்னா இன்று நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அதனை ஓரங்கட்டிவிட்டு பட புரோமோஷனில் கலந்து கொண்டிருக்கிறார் தமன்னா.

மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி தொடர்பான வழக்கு வேகமெடுத்துள்ள நிலையில் பாலிவுட் நடிகர் சாஹில் கான் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து நடிகர்கள் ஷ்ரத்தா கபூர், ரன்பீர் கபூர், ஹூமா குரேஷி, தமன்னா பாட்டியா உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

'பேர்பிளே ஆப்' என்பது மகாதேவ் பந்தய செயலியின் துணை செயலியாகும். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்காக தமன்னாவை மகாராஷ்டிரா சைபர் செல் வரும் ஏப்ரல் 29-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அந்தத் தேதியில் தான் மும்பையில் இல்லை எனவும், அதனால் வேறொரு தேதியில் விசாரணைக்கு வருவதாகவும் தமன்னா தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த மாதம் வெளியாக இருக்கும் 'அரண்மனை 4' படத்தின் தெலுங்கு புரோமோஷனுக்காக இன்று படக்குழு ஹைதராபாத் சென்றுள்ளது. தமன்னாவும் அந்த புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். நிகழ்வில் கலந்து கொண்ட தமன்னா, ராஷி கண்ணா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை ராஷி கண்ணா, 'அரண்மனை4' படத்தின் கதை கேட்காமலேயே படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார். தமன்னாவும் தெலுங்கு ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்