திடீர் மாரடைப்பு; டைரக்டர் சிராஜ் மரணம்

பிரபல டைரக்டர் சிராஜ் என்கிற சிராஜூதீன் சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65.

Update: 2017-07-25 21:45 GMT

சென்னை,

ராமராஜன் கதாநாயகனாக நடித்துள்ள என்ன பெத்த ராஜா, தங்கத்தின் தங்கம், ஊரெல்லாம் உன் பாட்டு, ஆனந்தராஜ் நடித்த என் ராஜாங்கம் ஆகிய படங்களை டைரக்டு செய்தவர்.

பல டைரக்டர்கள் இணைந்து இயக்கிய சுயம்வரம் படத்திலும் பணியாற்றி உள்ளார். பல படங்களுக்கு கதை–வசனமும் எழுதி இருக்கிறார். இவர் சென்னையில் உள்ள அசோக் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சிராஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி சிராஜ் உயிர் பிரிந்தது.

இவருக்கு ஆயிஷா என்ற மனைவியும், மன்சுரா, பானு என்ற மகள்களும் உள்ளனர். மரணம் அடைந்த சிராஜ் உடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்தது. சினிமா இயக்குனர்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோடம்பாக்கம் புலியூரில் உள்ள ஜும்மா மசூதி அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்