அஜித்தின் விவேகம் படத்தில் டிரைலர் வெளியானது

அஜித்தின் விவேகம் படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியானது.

Update: 2017-08-17 07:13 GMT

அஜித்துடன் இயக்குனர் சிவா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் விவேகம். இப்படம் அடுத்த வாரம்  24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் நேர்று இரவு  வெளியானது . விவேகம் டிரைலர் ஓர் சர்வதேச தரத்தில் ஆக்க்ஷன் கலந்த மாஸ் படமாக உருவாகியுள்ளது. டிரைலர் தொடங்கியவுடன் Who are you என்ற கேட்க அஜித் "நான் யார்ங்கிறதா எப்போவுமே என் எதிர்ல இருக்கிறவங்க தான் முடிவு பண்ணுவாங்க என்ற  வசனத்துடன் ஆரம்பமாகிறது, பிறகு அஜித் தலைமையில் ஆர்மி குழுவில் விவேக் ஓபராய் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் பயிற்சி எடுப்பது போல் Surviva Song காட்சிகள் வருகின்றனர்,

நீண்ட நாளுக்கு பிறகு அஜித் காஜல் ஆகர்வாலின் ரொமான்டிக் காட்சிகள் குறிப்பாக "உன் கூட இருக்கிறது சந்தோஷம்ங்கிறத விட நீதான் என் சந்தோஷமாவே இருக்க என்ற உணர்வான வசனங்கள் உள்ளன. அதன் பிறகு தான் படத்தின் கதைக்களம், அக்ஷரா ஹாசன் என்ட்ரி, பைக் சேஸ், ட்ரெயின் சண்டை கடைசியாக அஜித்தின் 6 பேக் காட்சிகள்.

"போராடாம அவன் போகவும் மாட்டான். சாகவும் மாட்டான். பீனிக்ஸ் பறவை மாதிரி எரிக்க எரிக்க எழுந்து வருவான் என்ற விவேக் ஓபராய் சொல்லும் வசனம் டிரைலரை இன்னும் மெருகேற்றுகிறது.

குறிப்பாக படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது.  பின்னணி இசை அற்புதமாக உள்ளது . மொத்தத்தில் இயக்குனர் சிவாவின் திரைக்கதை அஜித்தின் அர்ப்பணிப்பு ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.

இந்த டிரைலர் ரிலீஸ் ஆகி 10 நிமிடத்தில் ஐம்பதாயிரம் லைக்ஸும் அரைமணி நேரத்தில் 1லட்சம் லைக்ஸை தாண்டியுள்ளது. இதன் மூலம் விவேகம் டிரைலர், டீஸர் சாதனை முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


மேலும் செய்திகள்