விக்ரம் நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ வட சென்னையை பின்னணியாக கொண்ட படம்

விக்ரம்–தமன்னா ஜோடியாக நடித்து வரும் ‘ஸ்கெட்ச்’.

Update: 2017-09-22 00:15 GMT
விக்ரம்–தமன்னா ஜோடியாக நடித்து வரும் ‘ஸ்கெட்ச்’ படத்தை எஸ்.தாணுவின் வி கிரியே‌ஷன்ஸ் வழங்க, மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் பெரும்பகுதி காட்சிகள், சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன.

சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், விஷ்வாந்த், பாபுரசஜா, வேல ராமமூர்த்தி, மதுமிதா, பிரியங்கா, சாரிகா ஆகியோரும் நடித்து வருகிறார்கள். எஸ்.எஸ்.தமன் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். கதை–திரைக்கதை–வசனம் எழுதி விஜய்சந்தர் டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி இவர் கூறுகிறார்:–

‘‘இது, அதிரடியான சண்டை காட்சிகள் நிறைந்த படம். வட சென்னையை பின்னணியாக கொண்டு உருவாகிறது. படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சிக்காக, சென்னையில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டன. விக்ரம்–தமன்னாவுடன் 150 நடன கலைஞர்கள், 1,500–க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்