குடும்ப வாழ்க்கை பற்றி சமந்தா ருசிகர தகவல்

குடும்ப வாழ்க்கை பற்றி சமந்தா ருசிகர தகவல்

Update: 2018-02-09 22:00 GMT
குடும்ப வாழ்க்கை பற்றி சமந்தா ருசிகர தகவல்

நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகரும் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவுக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாவில் நடித்து வருகிறார்.

திருமண வாழ்க்கை குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-

“திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று எனது கணவரோ, அவரது வீட்டில் உள்ளவர்களோ தடை விதிக்கவில்லை. அதனால்தான் நான் தொடர்ந்து நடிக்கிறேன். கணவரும், மனைவியும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால் விரும்பிய தொழிலில் நீடிப்பதில் எந்த கஷ்டமும் இருக்காது.

சினிமா என்பது கவர்ச்சி உலகம். அதை தெரிந்துகொண்டுதான் இந்த துறைக்கு வந்தேன். கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பது தவறு அல்ல. ஆனால் கவர்ச்சியை தேவை இல்லாமல் படத்தில் திணித்தால் அது பிடிக்காது. திருமணத்துக்கு பிறகும் ஓய்வு இல்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த வாழ்க்கை எனக்கு பிடித்து இருக்கிறது.

விஷாலுடன் இரும்புத்திரை என்ற படத்தில் நடித்து இருக்கிறேன். அந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்கிறேன். இரண்டு தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன. சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் படத்திலும் நடிக்கிறேன்.

குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது. கணவருடன் சண்டை போடுகிறீர்களா என்றெல்லாம் என்னிடம் கேட்கிறார்கள். ஆமாம் கணவருடன் நான் சண்டை போடுகிறேன். தகராறுக்கு பிறகு அவர் இறங்கி வர மாட்டார். நான்தான் அவரிடம் பேசி சமாதானம் செய்வேன். நாக சைதன்யாவுக்கு ரொம்ப நல்ல மனது. அவரால் சண்டை வராது. கலாட்டா செய்வது நான்தான்.”

இவ்வாறு சமந்தா கூறினார்.

மேலும் செய்திகள்