நடிகர் ரன்வீர் சிங்குடன் திருமணம் எப்போது? -தீபிகா படுகோனே

நடிகர் ரன்வீர் சிங்குடன் திருமணம், விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-02-11 23:15 GMT
பத்மாவத் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவுக்கும் ரன்வீர் சிங்குக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சினிமா, காதல் அனுபவங்கள் குறித்து தீபிகா படுகோனே அளித்த பேட்டி வருமாறு:-

“சினிமாவில் சாதிப்பதற்கு நடிகர்-நடிகைகள் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும். சொந்த பந்தங்கள், குடும்பங்கள், நண்பர்களை விட்டு அவர்கள் விலகி இருக்க வேண்டும். நானும் அதற்கு தயாராக இருந்ததால்தான் இவ்வளவு உயர்ந்த இடத்துக்கு வர முடிந்தது. பத்மாவத் போன்ற படங்களில் நடித்தால் இன்னும் நிறைய கஷ்டப்பட வேண்டும்.

இவ்வளவு உழைத்தும் அந்த படத்துக்கு சர்ச்சை ஏற்பட்டது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அதையும் மீறி படம் வெற்றிகரமாக ஓடி கஷ்டங்களை மறக்க செய்தது. சில உறவுகள் முறியும்போது மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். அந்த வேதனையை காலம்தான் குணப்படுத்தும். எனக்கும் அதுபோன்ற முறிவுகள் ஏற்பட்டு உள்ளன.

அப்போது எனது குடும்பத்தினரும் நண்பர்களும் துணையாக இருந்து அதில் இருந்து நான் மீண்டு வருவதற்கு உதவினார்கள். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவு திருமணத்தில்தான் முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. எனக்கும் நடிகர் ரன்வீர் சிங்குக்கும் உள்ள உறவு பல கட்டங்களை தாண்டி வலுவாகி இருக்கிறது.

அவர் பக்கத்தில் இருக்கும்போது ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வேறு எதுவும் ஞாபகம் வருவது இல்லை. எங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாது. 15 வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். இதில் இருந்து விடுபட்டு குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டு இருக்கிறது.

சரித்திர கதைகளை தவிர்த்து சாதாரண பெண்ணாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் சாதாரண பெண்கள்தான் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். கணவர், குழந்தைகள், அம்மா, மாமியார், மாமனார் என்று அனைவரையும் கவனித்துக்கொள்கின்றனர். ஆனால் அந்த பெண்களின் உழைப்புக்கு மரியாதை இல்லை. ஆண்களைத்தான் மதிக்கிறார்கள்.” இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.

மேலும் செய்திகள்