சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 'குரங்கு பெடல்' படத்தின் டிரைலர் நாளை வெளியீடு

குரங்கு பெடல்' திரைப்படத்தை ,கமல் கண்ணன் இயக்கியுள்ளார்.

Update: 2024-04-28 16:40 GMT

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். அவரது தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றன. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது 'குரங்கு பெடல்' என்ற படத்தை தயாரித்துள்ளார். கமல் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் 'குரங்கு பெடல்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. . 'குரங்கு பெடல்' திரைப்படம் மே 3-ம்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்