இணையதளத்தில் திருட்டுத் தனமாக ரஜினியின் ‘காலா’ பட வீடியோ காட்சி வெளியானதால் அதிர்ச்சி

ரஜினி நடித்த ‘காலா’ படத்தின் வீடியோ இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-02-12 23:45 GMT
ஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஜினிகாந்தை வில்லன் இரும்பு கம்பியால் தாக்க வருவது போன்றும் பதிலுக்கு அவர் காலால் எட்டி உதைப்பது போன்றும் இந்த காட்சி உள்ளது. இதனை பலரும் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள்.

இந்த படத்தின் புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வந்தன. படப்பிடிப்பை சிலர் திருட்டுத்தனமாக படம் பிடித்து வெளியிட்டனர். தற்போது வீடியோவும் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த காட்சியை இணையதளத்தில் வெளியிட்டது யார் என்று படக்குழுவினர் விசாரணை நடத்துகிறார்கள். போலீசில் புகார் அளிப்பது குறித்தும் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

பட வெளியீட்டை ஏப்ரல் 27-ந் தேதி கொடி தோரணங்கள் கட்டி கொண்டாட தயாராகி வந்த நிலையில் சண்டை காட்சி வீடியோ கசிந்துள்ளது.

காலா படத்தில் கதாநாயகியாக கியூமா குரோஷி நடித்துள்ளார். சமுத்திரக்கனி, நானா படேகர், அஞ்சலி பட்டீல், சாயாஜி ஷிண்டே ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள்.

இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு மும்பையில் உள்ள தாராவி பகுதியில் நடந்தது. நெல்லையில் இருந்து மும்பைக்கு சென்ற தமிழர் தாதாவாக மாறி அங்குள்ள தமிழர் களுக்கு நன்மைகள் செய்வது போன்று இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. ரஜினிகாந்த் தாதாவாக நடித்துள்ளார். 

மேலும் செய்திகள்