ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் டீசர் வெளியீடு

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. #KaalaTeaser #Rajinikanth

Update: 2018-03-02 00:44 GMT
சென்னை,

ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பின்னணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது.

இப்படத்தை அடுத்த ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியிடும் என்று தனுஷ் அறிவித்திருந்தார்.

ஆனால், ஜத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘காலா’ டீசர் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக தனுஷ் தெரிவித்தார். இதனால் மார்ச் 2ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று (2-ம் தேதி) இரவு 12 மணியளவில் காலா டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டார்.  #Kaala #KaalaTeaser #Rajinikanth #tamilnews

மேலும் செய்திகள்