புதிய படங்கள் வெளியாகாததால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்தது

தியேட்டர்களில் புதிய படங்களை திரையிட கியூப், யூஎப்ஓ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கடந்த 1-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2018-03-02 21:30 GMT
தியேட்டர்களில் புதிய படங்களை திரையிட கியூப், யூஎப்ஓ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கடந்த 1-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்டணத்தை குறைப்பதுவரை புதிய படத்தை வெளியிடுவது இல்லை என்று அவர்கள் அறிவித்து உள்ளனர்.

இதனால் 2 நாட்களாக புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. குறிப்பாக வெள்ளிக் கிழமைகளில் புதிய படங்கள் திரைக்கு வருவது வழக்கம். ஆனால் நேற்று பவித்ரன் இயக்கிய ‘தாராவி’ படம் மட்டும் தடையை மீறி வெளியானது. இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. புதிய படங்கள் வெளியாகாததால் ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த படங்களையே தியேட்டர் அதிபர்கள் தொடர்ந்து திரையிட்டார்கள். அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் இதே கோரிக்கைக்காக புதிய படங்களை வெளியிடாமல் பட அதிபர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்