நடிகை சன்னி லியோன் தம்பதிக்கு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள்

நடிகை சன்னி லியோன் மற்றும் டேனியல் தம்பதி வாடகை தாய் வழியே இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுள்ளனர். #SunnyLeone

Update: 2018-03-05 11:15 GMT

மும்பை,

இந்தியில் ஜிஸ்ம் 2 படம் வழியே அறிமுகம் பெற்று ராகினி எம்.எம்.எஸ். 2 வழியே பிரபலமடைந்த நடிகை சன்னி லியோன்.  அதன்பின் ஹேட் ஸ்டோரி 2, ஏக் பஹெலி லீலா உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.  தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.

கடந்த வருடம் நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் வெபர் இருவரும் நிஷா என்ற பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த தம்பதி வாடகை தாய் மூலம் 2 ஆண் குழந்தைகளை பெற்றுள்ளனர்.

இதுபற்றி சன்னி லியோன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இது உண்மையில் கடவுளின் திட்டம்!  இதுபோன்ற ஒரு பெரிய அழகான குடும்பம் கிடைக்கும் வாய்ப்பினை பெற போகிறோம் என்று எங்களுக்கு தெரியாது.  நாங்கள் மகிழ்ச்சியை கடந்த நிலையில் உள்ளோம்.  எங்களது வாழ்வில் 3 அதிசயங்கள் கிடைத்துள்ளன.  உண்மையில் கடவுளின் ஆசியை பெற்றுள்ளோம்.  எங்களது குடும்பம் நிறைவடைந்து உள்ளது.

டேனியல் மற்றும் எனது மரபணுக்களை கொண்டு வாடகை தாய் வழியே குழந்தை பெற்று கொள்ள முடிவெடுத்தோம்.  ஆஷர் மற்றும் நோவா ஆகியோர் எங்களது உயிரியல் குழந்தைகளாக உள்ளனர்.  எங்கள் குழந்தைகள் பிறக்கும்வரை அவர்களை சுமப்பதற்கு தேவதை ஒன்றை கடவுள் எங்களுக்கு அனுப்பி உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

லியோன் தனது இன்ஸ்டாகிராமில் 3 குழந்தைகளுடன் இருப்பது போன்ற குடும்ப படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.  அதில், எங்களது குழந்தைகள் கடந்த சில வாரங்களுக்கு முன் பிறந்துள்ளனர்.  ஆனால் பல வருடங்களுக்கு எங்களது இருதயங்கள் மற்றும் கண்களில் அவர்கள் வாழ்ந்து வருவர்.  எங்களுக்காக கடவுள் சில சிறப்புடைய விசயங்களை திட்டமிட்டு உள்ளார்.  பெரிய குடும்பத்தினையும் அளித்து உள்ளார்.  3 அழகான குழந்தைகளுக்கு நாங்கள் பெற்றோர் என பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்