ஸ்ரீதேவி மரணம் குறித்த ஆவணப்படம்

ஸ்ரீதேவி மரணம் குறித்த ஆவணப்படம் தயாராகிறது.

Update: 2018-03-09 22:15 GMT

நடிகை ஸ்ரீதேவி 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 13 வயதில் கதாநாயகி ஆனார் என்பதும் 50 ஆண்டுகள் சினிமாவில் நிலைத்து இருந்து இந்திய ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தார் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அவரைப்பற்றி தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன.

அவற்றை ஆவணப்படம் மூலம் வெளிக்கொண்டு வர ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் முடிவு செய்துள்ளார். ஸ்ரீதேவியின் திடீர் மரணம் போனிகபூரை நிலைகுலையச் செய்துள்ளது. தாங்கமுடியாத துக்கத்தில் இருக்கிறார். அதில் இருந்து இன்னும் அவர் மீளவில்லை. இன்னொரு புறம் ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் இருப்பதாக வெளியாகும் தகவல்களும் அவரை மிகவும் வேதனைப்படுத்தி உள்ளது.

எனவேதான் ஸ்ரீதேவி பற்றிய ஆவணப்படத்தை எடுத்து அவருக்கும் தனக்கும் இருந்த காதல், குடும்ப வாழ்க்கை, சினிமா என்று அனைத்து விஷயங்களையும் வெளிப்படுத்தப்போகிறார். துபாயில் ஸ்ரீதேவிக்கு எவ்வாறு மரணம் நேரிட்டது? குளியல் அறையில் நடந்தது என்ன போன்ற விவரங்களையும் இந்த ஆவணப்படத்தில் கொண்டு வருகிறார்.

ஸ்ரீதேவியுடன் நடித்த நடிகர்கள், அவரை வைத்து படங்கள் இயக்கிய டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரும் ஆவணப்படத்தில் தோன்றி ஸ்ரீதேவியுடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். ஸ்ரீதேவி இந்தியில் நடித்து அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய மிஸ்டர் இந்தியா படத்தை இயக்கிய சேகர்கபூர் இந்த ஆவணப்படத்தை தயாரிக்கிறார்.

பெங்களூரில் உள்ள ஸ்ரீதேவியின் ரசிகர்களும் அவரைப்பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரிக்க தயாராகி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்