முகநூல் மீது பாலிவுட் நடிகர் புகார்

கடந்த வாரம் பேஸ்புக் முறைகேடு விவகாரம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

Update: 2018-03-31 00:45 GMT
 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கு அவர்களது அனுமதியில்லாமல், தகவல் ஆய்வு நிறுவனமான கேம்பிரிஜ் அனெட்டிலா நிறுவனத்தால் திருடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து பேஸ் புக் நிறுவனர் மார்க் மன்னிப்பு கோரினார்.

இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தரும் பேஸ்புக் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். ‘முகநூல் கணக்கை நிரந்தரமாக அழித்த பிறகும் அது தொடர்ந்து ஆக்டிவாக உள்ளது’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்