ஸ்டிரைக்-கில் வசூல் குவிக்கும் சமந்தாவின் தெலுங்கு படம்

ஸ்டிரைக்-கில் சமந்தாவின் தெலுங்கு படம் வசூலை குவித்து வருகிறது.

Update: 2018-04-03 23:00 GMT

பட அதிபர்கள் ஸ்டிரைக்கால் ஒரு மாதத்துக்கு மேலாக புதிய தமிழ் படங்கள் ரிலீசாகவில்லை. 30-க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன. இதனால் தியேட்டர்களில் பழைய எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் படங்களை திரையிட்டு வருகிறார்கள். ஏற்கனவே வந்த விஜய், அஜித்குமார் படங்களையும் மீண்டும் வெளியிடுகின்றனர்.

திரையரங்குகளில் கூட்டம் குறைவாகவே இருக்கிறது. இந்த நிலையில் ராம்சரன் ஜோடியாக சமந்தா நடித்த ரங்கஸ்தலம் மற்றும் பாகி 2 ஆகிய இரண்டு தெலுங்கு படங்கள் தமிழகம் முழுவதும் ஸ்டிரைக்கில் வெளியாகி நல்ல வசூல் பார்த்துள்ளன. ரங்கஸ்தலம் சென்னையில் மட்டும் 3 நாட்களில் ரூ.70 லட்சம் வசூலித்துள்ளது. தமிழகம் முழுவதும் ரூ.1 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது. நேரடி தெலுங்கு படத்துக்கு இவ்வளவு தொகை வசூலானது சாதனை என்கின்றனர்.

வேறு புதிய படங்கள் இல்லாததால் ரசிகர்கள் சமந்தா படத்தை பார்க்க தியேட்டர்களில் திரண்டதாக கூறப்படுகிறது. பாகி 2 படமும் நல்ல வசூல் குவித்துள்ளது. ஏற்கனவே நயன்தாரா மலையாளத்தில் நடித்த படத்தையும் சமீபத்தில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர். அந்த படத்துக்கும் வரவேற்பு கிடைத்தது.

மேலும் செய்திகள்