மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தில் சோனியா காந்தி வேடத்தில் ஜெர்மனி நடிகை

மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தில் சோனியா காந்தி வேடத்தில் ஜெர்மனி நடிகை நடிக்க உள்ளார்.

Update: 2018-04-06 23:00 GMT

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு ‘த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகிறது. மன்மோகன் சிங்கின் சிறுவயது நிகழ்வுகள், கல்வி தகுதி, நிதி அமைச்சராகி பொருளாதாரத்தில் நிகழ்த்திய சாதனைகள், சோனியா காந்தி பிரதமராக எதிர்ப்பு கிளம்பியதால் அந்த பதவிக்கு அவர் தேர்வானது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் இடம்பெறுகிறது.

இதில் மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அனுபெம்கெர் நடிக்கிறார். விஜய் ரத்னாகர் டைரக்டு செய்கிறார். மன்மோகன் சிங் பற்றி சஞ்சய் பாரு எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்த படத்தை உருவாக்குகின்றனர். இதில் சோனியா காந்தியாக நடிக்க முன்னணி நடிகைகள் பலர் பரிசீலிக்கப்பட்டனர்.

இறுதியில் ஜெர்மனி நடிகை சுஸானே பெர்னர்ட்டை சோனியா வேடத்தில் நடிக்க தேர்வு செய்துள்ளனர். இவர் ஏற்கனவே சில இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். சோனியாவின் மகள் பிரியங்கா காந்தியாக அஹன கும்ரா நடிக்கிறார். அக்‌ஷய் கண்ணாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

இந்த படத்தின் முதல் தோற்றத்தை அனுபெம்கெர் வெளியிட்டார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த வருடம் இறுதியில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்