டிஆர்பிக்காக ஸ்ரீ ரெட்டி நிகழ்ச்சியை ஒளிபரப்புவதாக தெலுங்கு டிவிக்களுக்கு நடிகர் பவன்கல்யாண் கண்டனம்

டிஆர்பிக்காக ஸ்ரீ ரெட்டி நிகழ்ச்சியை ஒளிபரப்புவதாக தெலுங்கு டிவிக்களுக்கு நடிகர் பவன்கல்யாண் கண்டனம் தெரிவித்து உள்ளார். #SriReddy #PawanKalyan

Update: 2018-04-20 09:58 GMT
ஐதராபாத்

தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி இந்தியா முழுவதும் பிரபலமானார் நடிகை ஸ்ரீரெட்டி. இவரது அரை நிர்வாணப் போராட்டம் காரணமாக தெலுங்கு திரைப்பட உலகம் அதிர்ச்சி அடைந்தது. தெலுங்கு நடிகர் சங்கத்தின் மீதும் அடுக்கடுக்கான புகார்களை அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் பவன் கல்யாண், ''நடிகை ஸ்ரீரெட்டி தனது பிரச்சினை உண்மை என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டும் , தொலைக்காட்சிகளில் இதுபோன்று போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்துவது சரியல்ல, தொலைக்காட்சிகளால் செய்திகளை வழங்க முடியுமே தவிர, நீதி வழங்க முடியாது'' என கூறியிருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை ஸ்ரீரெட்டி இதற்கு கண்டனம் தெரிவித்து திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு வருத்தப்படுகிறேன், அவரை சகோதரராக கருதியதற்கு என்னையே நான் செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டுமெனக் கூறினார்.

அப்படிக் கூறியதுடன் நில்லாமல் காலிலிருந்த செருப்பைக் கழற்றி பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு செருப்பால் அடித்துக்கொள்கிறேன் என்று கன்னத்தில் செருப்பால் அடித்துக்கொண்டார், பின்னர் தவறான செய்கையையும் காண்பித்தார். செய்தியாளர்கள் முன்னிலையில் செருப்பால் அடித்துக்கொண்டதன் மூலம் மீண்டும் நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதனிடையே ஆந்திர பவர் ஸ்டார் பவன் கல்யாணை விமர்சித்ததால் அவரது ரசிகர்கள் டுவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஸ்ரீ ரெட்டியை வறுத்தெடுத்து வருகின்றனர். ஸ்ரீ ரெட்டிக்கு ஏராளமான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தெலுங்கு டிவிக்கள் தொடர்ந்து ஸ்ரீரெட்டி சம்பந்தபட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில்  பவன்கல்யாண் தனது டுவிட்டரில்  தெலுங்கு டிவிக்களுக்கு கண்டனம் தெரிவித்து கூறி இருப்பதாவது;-

நீங்கள் எல்லோரும் உங்கள் சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக நேசிக்கிறீர்கள் அல்லது உயிரைவிட தயாராக உள்ளீர்கள். சரியா??  நல்லது.. அது எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமையுமா?

தாயாரை தரக்குறைவாக பேசி டிஆர்பியை உயரத்த முடியுமா உங்கள் மனதை திறங்கள் ஆர்கே.  

சுவாரஸ்யமான உண்மை, நடப்பு டிரீம் அணியில் தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள், மருமகள்கள் மற்றும் அனைத்து பெண்களுமே உள்ளனர். அவர்களது பெண்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும்  உள்ளனர். ஆனால் நமது 70 வயது முதிர்ந்த வயதுடைய தாயாரை, தங்கள் டி.ஆர்.பி க்கிற்கும் அரசியல் நலனுக்கும் துஷ்பிரயோகம் செய்ய வேண்டியிருந்தது. என் அம்மாவின் கவுரவத்தை நான் பாதுகாக்க முடியாவிட்டால் நான் இறப்பதே மேல்

மேலும் செய்திகள்