சினிமா செய்திகள்
காலா படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியீடு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகிறது. #kaala
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் உருவாகி உள்ளது. காலா படத்தை ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்து இருக்கிறார். பா.ரஞ்சித் டைரக்டு செய்து இருக்கிறார். 

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். கதாநாயகியாக இந்தி நடிகை ஹீமா குரோசி நடித்துள்ளார். இந்தி நடிகர் நானா படேகர், சமுத்திரக்கனி, ரவி காலே, சாயாஜி ஷின்டே, ஈஸ்வரிராவ், அஞ்சலி பட்டேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். 

ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்புக்கு பிறகு, வெளியாகும் படம் என்பதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காலா படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காலா படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 9 (மே மாதம்) ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

காலா படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த தகவலை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். 


Wunderbar films #kaala new trailer will be released today evening at 7 pm .. #thekingarrives#manofmasses#thalaivar#superstar WORLD WIDE RELEASE FROM JUNE 7Th. Mark the date. Keep the leave letters ready. — Dhanush (@dhanushkraja) May 28, 2018