சினிமா செய்திகள்
வயிற்று வலி காரணமாகசன்னி லியோன் ஆஸ்பத்திரியில் அனுமதி

நடிகை சன்னி லியோன் உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கவர்ச்சி படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் முத்திரை பதித்து கனவு தேவதையாக திகழ்ந்து வருபவர், சன்னி லியோன். உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்தார். இந்தநிலையில் ‘நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் இனிமேல் நடிப்பதாக முடிவு செய்துள்ளேன்’, என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

ஹாலிவுட் டி.வி. சேனலில் முக்கிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வரும் சன்னி லியோன், தமிழில் ‘வீரமாதேவி’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தான் தற்போது பாலிவுட் சினிமாவின் ‘ஹாட் டாக்’ ஆக இருந்து வருகிறது. இந்த படம் வெளியாகும் தினத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில் நடிகை சன்னி லியோன் உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். திடீர் வயிற்று வலி காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஓரிரு நாட்கள் சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சன்னி லியோன் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.