சினிமா செய்திகள்
அடுத்த மாதம் பிரியங்கா சோப்ரா திருமணம்?

பிரியங்கா சோப்ராவுக்கும் அவரை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் காதல் மலர்ந்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் நகரங்களில் இருவரும்  ஜோடியாக சுற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெருக்கத்தை அம்பலப்படுத்தின.

அமெரிக்காவில் நடந்த நிக் ஜோனாஸ் குடும்ப திருமண நிகழ்ச்சியிலும் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அப்போது உறவினர்களிடம் பிரியங்கா சோப்ராவை அவர் அறிமுகம் செய்து வைத்தார். தற்போது இருவரும் மும்பை வந்து இருக்கிறார்கள். வீட்டுக்கு அழைத்துச் சென்று தனது குடும்பத்தினரிடம் நிக் ஜோனாசை பிரியங்கா சோப்ரா அறிமுகப்படுத்தினார்.

அவர்களுக்கு நிக் ஜோனாசை பிடித்து விட்டதாகவும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் கைகோர்த்து ஜோடியாக விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர். தற்போது அவர்கள் கோவா சென்றுள்ளனர். அங்கு சில நாட்கள் தங்கி விட்டு மும்பை திரும்புகிறார்கள்.

பிரியங்கா சோப்ரா–நிக் ஜோனாஸ் திருமணத்தை அடுத்த மாதம்(ஜூலை) நடத்த இரு வீட்டு குடும்பத்தினரும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.