சினிமா செய்திகள்
பட வாய்ப்புகள் வருகின்றன கோபிகா மீண்டும் நடிப்பாரா?

தமிழில் 2004–ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ‘ஆட்டோகிராப்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் கோபிகா.
கனா கண்டேன், பொன்னியின் செல்வன், தொட்டி ஜெயா, வீராப்பு, வெள்ளித்திரை ஆகிய படங்களிலும் கோபிகா நடித்துள்ளார். மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

கோபிகாவுக்கும், அயர்லாந்தில் டாக்டராக இருக்கும் அஜிலேஜுக்கும் 2008–ல் திருமணம் நடந்து. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி அயர்லாந்திலேயே கணவருடன் குடியேறினார். இவர்களுக்கு எமி என்ற மகளும், எய்டன் என்ற மகனும் உள்ளனர். இப்போது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்.

கோபிகாவுக்கு மீண்டும் சினிமா வாய்ப்புகள் வந்துள்ளன. தமிழ், மலையாள இயக்குனர்கள் அவரை அணுகி தங்கள் படங்களில் நடிக்கும்படி கேட்டுள்ளனர். ஆனால் மீண்டும் நடிப்பது குறித்து அவர் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.