சினிமா செய்திகள்
‘தில்லுக்கு துட்டு-2’ படத்தில்சந்தானம் ஜோடியாக ஒரு மலையாள நடிகை!

சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த படத்தின் 2-ம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தை டைரக்டு செய்த ராம்பாலாவே இரண்டாம் பாகம் படத்தையும் டைரக்டு செய்கிறார்.
தில்லுக்கு துட்டு-2 படத்தை பற்றி டைரக்டர் ராம்பாலா :-

“தில்லுக்கு துட்டு-2, முதல் பாகத்தை விட மிகவும் ஜாலியான படைப்பாக இருக்கும். இது, நகைச்சுவை கலந்த திகில் படம். என்றாலும் படத்தில் நிறைய ‘சீரியஸ்’ ஆன திகில் காட்சிகள் உள்ளன. இந்த படம், கதாநாயகியின் கதாபாத்திரம் மீது பயணிக்கும் கதையம்சம் கொண்டது.

மலையாள பட உலகில் பிரபலமாக இருக்கும் ஸ்ரீதா சிவதாஸ்தான் படத்தின் கதாநாயகி. கதைக்கு மலையாளம் பேசும் மலையாள பெண் தேவை என்பதால்தான் இவரை கதாநாயகியாக தேர்வு செய்தோம். மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, ‘ஜில் ஜங் ஜக்’ புகழ் பிபின் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகம் மிக சிறப்பாக வந்து இருக்கிறது. நாங்கள் கடுமையாக உழைத்து, அதிக கவனம் செலுத்தி, இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். முதல் பாகம் வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. செப்டம்பர் வெளியீடாக படம் திரைக்கு வரும்.”