சினிமா செய்திகள்
நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் பலி ; நடிகர் -நடிகைகள் இரங்கல்

நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் பலியானார். நடிகர் -நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை,

நடிகரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் பலியானார். தந்தையின் உடலை வாங்க மருத்துவமனைக்கு சென்ற நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். கதறி அழுததை பார்த்து ரசிகர்களுக்கு அழுகை வந்து விட்டது.

இந்நிலையில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

நந்தமுரி ஹரிகிருஷ்ணா காருவின் ஆத்மா சாந்தி அடையட்டும். இது எனக்கு பெரிய அதிர்ச்சி. இந்த செய்தியை ஜீரணிக்கவே முடியவில்லை. தாரக் காரு மற்றும் குடும்பத்தாருக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
Rest in peace Nandamuri Hari Krishna garu..its a big shock to me...I can't digest this news..sorry Tarak Garu and family...
Ayyayyyooo Tharak garini odharchatam yevvari tharam kadhu..aayana asale sensitive..devuda endhukila ??#RIPHariKrishnaGarupic.twitter.com/Lm3TVuYhpO — Sri Reddy (@MsSriReddy) August 29, 2018 பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது என்று அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூறினார். தற்போது அவர் இறந்துவிட்டார். உங்களை மிஸ் பண்ணுகிறேன் அண்ணா என்று நடிகர் நாகர்ஜுனா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இன்று நாகர்ஜுனாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

చాలా రోజులు ఐయింది నిన్ను చూసి, కలవాలి తమ్ముడు..that’s what he said a few weeks ago and now he is gone.all I feel is a void,I will miss you Anna!!!! pic.twitter.com/T9epx3ZEEk — Nagarjuna Akkineni (@iamnagarjuna) August 29, 2018 நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் திடீர் மறைவு செய்தியை அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.


Shocked and saddened to hear of #NandamuriHarikrishna Garu’s sudden demise. Condolences to the family and may he rest in peace. — Radikaa Sarathkumar (@realradikaa) August 29, 2018 ஹரிகிருஷ்ணாவின் மரண செய்தி அறிந்து மகேஷ் பாபு கவலை அடைந்துள்ளார். தம்பி ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார் மகேஷ் பாபு.


Deeply saddened by the news of Harikrishna garu's untimely demise. May his soul rest in peace. Strength and love to my brother @tarak9999 and his entire family in this time of grief. — Mahesh Babu (@urstrulyMahesh) August 29, 2018 ஹரிகிருஷ்ணாவின் மரண செய்தி அறிந்து சமந்தா அதிர்ச்சி அடைந்துள்ளார்.


#RIPHarikrishnaGaru Shocked and saddened . Strength to the family in this difficult time . — Samantha Akkineni (@Samanthaprabhu2) August 29, 2018