‘‘சுசிகணேசன் போனில் மிரட்டுகிறார்’’ அமலாபால் மீண்டும் புகார்

இயக்குனர் சுசிகணேசன் போனில் தன்னை மிரட்டுவதாக நடிகை அமலாபால் மீண்டும் புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-25 23:30 GMT
டைரக்டர் சுசிகணேசன் 13 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் டைரக்டர் லீனா மணிமேகலை புகார் கூறினார். இதனை மறுத்த சுசிகணேசன் மான நஷ்ட வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் நடிகை அமலாபாலும் சுசிகணேசன் மீது பாலியல் புகார் தெரிவித்து உள்ளார்.

அமலாபால் கூறும்போது, ‘‘சுசிகணேசன் இயக்கிய திருட்டுப்பயலே–2 படத்தில் நடித்தபோது, அவருடைய இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியாத யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் தொல்லைகள் என்று பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன்’’ என்றார். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தர தெரியாத, சுசிகணேசனிடம் லீலா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பது எனக்கு புரிகிறது. எல்லா துறைகளில் இருந்தும் மீ டூவில் பதிவுகள் வெளிவர வேண்டும் என்றும்’’ தெரிவித்தார்.

இந்த நிலையில் பாலியல் புகார் சொன்னதற்காக சுசிகணேசன் போனில் மிரட்டியதாக அமலாபால் கூறியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியதாவது:–

‘‘இயக்குனர் சுசிகணேசனும் அவரது மனைவி மஞ்சரியும் எனக்கு போன் செய்தார்கள். எனது நிலைமையை விளக்குவதற்காக நானும் போனை எடுத்தேன். சுசிகணேசன் மனைவியை சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் சுசிகணேசன் என்னை மோசமாக திட்டி கேவலமாக பேசினார். இப்படி செய்து என்னை பயமுறுத்த பார்க்கிறார்’’ 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்