ரஜினிகாந்தின் திரைப்பட வரலாற்றில் 2.0 ஒரு மைல் கல் -கமல்ஹாசன் வாழ்த்து

ரஜினிகாந்தின் திரைப்பட வரலாற்றில் 2.0 ஒரு மைல் கல் என கமல்ஹாசன் கூறி உள்ளார்.

Update: 2018-11-03 07:27 GMT
சென்னை

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.

இதுவரை இந்திய படங்களில் இல்லாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின்போது படத்தின் 4டி டிரைலரை படக்குழு ஒளிபரப்பியது. 3டி கண்ணாடி மூலம் அரங்கில் இருந்த அனைவரும் இந்த டிரைலரை கண்டுகளித்தனர். 

2.0 படத்தில் வில்லனாக நடித்த நடிகர் அக்ஷய் குமார் இயக்குனர் சங்கர் மற்றும் நடிகர் ரஜினிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.O திரைப்படம் வெற்றி பெற கமல் வாழ்த்து தெரிவித்து உள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பட வரலாற்றில் 2.0 ஒரு மைல் கல் என  கமல்ஹாசன்  கூறி உள்ளார். 

மேலும் செய்திகள்