சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்

சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுள்ளது.

Update: 2018-11-06 11:14 GMT
சென்னை,

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட தடைக்கோரி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதை விசாரித்த நீதிமன்றம், சர்கார் படத்தை இணையதளங்களில் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. ஆனால், சர்கார் திரைப்படம் ஹெச்.டி தரத்தில் விரைவில் இணையதளத்தில் வெளிவரும் என தமிழ்ராக்கர்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு இருந்தது. 

சர்கார் படம் தொடர்பாக தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டுள்ள சவாலை முறியடிப்போம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டது. மேலும் உயர்நீதிமன்றமும் வெளியிட கூடாது என்று தடைவிதித்தது.

இருப்பினும், காலை தமிழ் ராக்கர்ஸ், சர்கார் படத்தின் எச்.டி.பிர்ண்ட் இன்றே வெளியாகும் என்று மீண்டும் ட்விட்டரில் பதிவு செய்தார்கள். இது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், மதியம் சர்கார் படம் இணைய தளத்தில் வெளியானது. இது படக்குழுவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்