புற்றுநோய் அனுபவத்தை மனிஷா கொய்ரலா புத்தகமாக வெளியிட்டார்

தனக்கு நேர்ந்த புற்றுநோய் அனுபவத்தை மனிஷா கொய்ரலா புத்தகமாக வெளியிட்டார்.

Update: 2018-11-12 22:30 GMT
தமிழில் மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மனிஷா கொய்ரலா. பாபா படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக வந்தார். கமல்ஹாசனுடன் இந்தியன் படத்திலும், அர்ஜுனுடன் முதல்வன் படத்திலும் நடித்துள்ளார். தனுசுடன் மாப்பிள்ளை படத்தில் நடித்தார்.

மனிஷா கொய்ரலா 1991-ல் சாடுகர் என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். 2010-ல் தொழில் அதிபர் சாம்ராட்டை மணந்து 2012-ல் விவாகரத்து செய்து பிரிந்தார்.

இந்த நிலையில் மனிஷா கொய்ரலாவுக்கு கர்ப்ப பை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்று குணமடைந்தார். அதன்பிறகு புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். இப்போது தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் அனுபவங்களை மனிஷா கொய்ரலா புத்தமாக எழுதி உள்ளார்.

இதில் புற்றுநோய்க்கு ஆளானது, அமெரிக்காவில் சிகிச்சை பெற்றது, அப்போது ஏற்பட்ட வேதனைகள், ஏமாற்றம், நோயில் இருந்து மீண்டது, அதன்பிறகு புதிய வாழ்க்கையை தொடங்கியது போன்ற விவரங்களை குறிப்பிட்டு இருக்கிறார். புற்றுநோய் எனக்கு எப்படி புதிய வாழ்க்கையை கொடுத்தது என்ற தலைப்பில் எழுதி உள்ள இந்த புத்தகம் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்