சீக்கிய மத சடங்கை மீறியதாக புகார் - சர்ச்சையில் தீபிகா படுகோனே திருமணம்

சீக்கிய மத சடங்கை மீறியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதால், தீபிகா படுகோனேவின் திருமணம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Update: 2018-11-21 23:00 GMT
நடிகை தீபிகா படுகோனேவுக்கும் இந்தி நடிகர் ரன்வீர்சிங்குக்கும் இத்தாலியில் திருமணம் நடந்தது. திருமணத்தை முடித்து விட்டு இருவரும் மும்பை திரும்பி உள்ளனர். பெங்களூருவிலும் மும்பையிலும் நடிகர், நடிகைகளை அழைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தும் ஏற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் திருமணத்தில் மத சடங்கை மீறி இருப்பதாக சீக்கிய அமைப்புகள் சர்ச்சையை கிளப்பி உள்ளன. தீபிகா படுகோனே கர்நாடகாவை சேர்ந்தவர். எனவே திருமணத்தை கொங்கனி கலாசார முறையிலும் ரன்வீர் சிங் சீக்கிய மதத்தை சேர்ந்தவர் என்பதால் சீக்கிய முறைப்படியும் 2 தடவை நடத்தினர்.

சீக்கிய முறையிலான திருமணத்தை சீக்கிய மத குருமார்களை வைத்து நடத்தினார்கள். இந்த திருமணத்தில் மத விதி மீறல் நடந்துள்ளதாக இத்தாலியில் உள்ள சீக்கிய சமூக தலைவர் சுக்தேவ் சிங்க் குற்றம் சாட்டி உள்ளார். அவர் கூறும்போது “சீக்கிய மத திருமணத்தை சீக்கிய குருத்வாராவில் மட்டுமே நடத்த வேண்டும். ஓட்டல் மற்றும் ரிசார்ட்டில் திருமணத்தை நடத்த கூடாது.

தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் திருமணம் சீக்கிய மத கொள்கைகளுக்கு எதிராக நட்சத்திர ஓட்டலில் நடந்துள்ளது. இதுகுறித்து சீக்கிய குருத்வாரா கமிட்டியிடம் புகார் செய்யப்பட்டு உள்ளது” என்றார். இந்த புகாரை 5 சீக்கிய மத குருமார்கள் விசாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்