ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் டைரக்டர் பெர்னார்டோ மரணம்

பிரபல ஹாலிவுட் இயக்குனர் பெர்னார்டோ பெர்டோலுஸி. இத்தாலியை சேர்ந்த இவர் ரோம் நகரில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார்.

Update: 2018-11-27 22:45 GMT
பெர்னார்டோ பெர்டோலுஸிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77.  

1944–ல் பிறந்த பெர்னார்டோ தனது தந்தையைப்போல் கவிஞராக விரும்பினார். ஆனால் டைரக்டராகி அவரது முதல் படமான த கிரிம் ரெபெர் 1962–ல் வெளியானது.  மார்லன் பிராண்டோ நடித்த லாஸ்ட் டாங்கோ படம் மூலம் சர்வதேச அளவில் புகழ் பெற்றார். 1972–ல் வெளியான இந்த படத்துக்கு அவருடையை சொந்த நாடான இத்தாலியில் தடை விதிக்கப்பட்டு 1987–ல் அந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது.

தி கான்பாமிஸ்ட், த லாஸ்ட்  எம்பரர், லிட்டில் புத்தா,  த ட்ரீமர்ஸ், மீ அண்ட் யு உள்பட பல படங்களை பெர்னார்டோ பெர்டோலுஸி இயக்கி உள்ளார். 1988–ல் த லாஸ்ட் எம்பரரர் படம் 9 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அனைத்து விருதுகளையும் வென்றது. பெர்னார்டோவும் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை பெற்றார்.  

சீனாவின் கடைசி ஆட்சியாளர் பு யியின் சுயசரிதையை மையமாக வைத்து வெளியான இந்த படத்துக்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்தது. வசூலிலும் சாதனை படைத்தது.

மேலும் செய்திகள்