பட உரிமை தருவதாக ரூ.32 கோடி மோசடி - பெண் தயாரிப்பாளர் கைது

பட உரிமை தருவதாக ரூ.32 கோடி மோசடி செய்த பெண் தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-12-10 22:51 GMT
இந்தியில் அக்‌ஷய்குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘பேட்மேன்’. இந்த படத்தை பிரபல இந்தி பெண் தயாரிப்பாளரான பிரர்ண அரோரா தயாரித்து இருந்தார். அக்‌ஷய்குமார் நடித்த ரஸ்டம், ஏக் பிரேம் கதா, பரி ஆகிய படங்களையும் கிரிஅர்ஜ் என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் மூலம் அர்ஜுன் என்.கபூருடன் இணைந்து தயாரித்து இருந்தார்.

இவர் ஒரே படத்தின் உரிமையை பலருக்கு விற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. வாசு பக்னான் என்பவரிடம் பட உரிமையை தருவதாக ரூ.32 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. இதுபோல் மேலும் பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக தெரியவந்தது. ஆனால் படத்தின் உரிமையை சொன்னபடி அவர்களுக்கு வழங்கவில்லை.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வாசு பக்னானிடம் பணம் வாங்கி ஏமாற்றியது உறுதியானது. இதைத்தொடர்ந்து பிரர்ண அரோனாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பாஸ்போர்ட், பான்கார்டுகளையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பிரர்ண அரோனாவை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இந்த கைது நடவடிக்கை இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்