மன்னிப்பு கேட்க சொல்வதா? பாடகி சின்மயி எதிர்ப்பு

சினிமா பின்னணி பாடகி சின்மயி, ‘டுவிட்டரில்’ கூறியிருப்பதாவது:–

Update: 2018-12-29 23:15 GMT
‘‘நான் சினிமாவில் வேலை செய்ய டப்பிங் யூனியனுக்கு மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்றும், ரூ.1½ லட்சம் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். 2006–ம் ஆண்டு முதல் என் மூலமாக டப்பிங் யூனியன் அதிக வருமானம் ஈட்டியுள்ளது.

ஆனால் தற்போது என் வேலைக்கான உரிமையை பெறுவதற்கு ரூ.1½ லட்சம் செலுத்த வேண்டும் என்கிறார்கள். சில படங்களில் மட்டும் டப்பிங் பேசிய பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கத்தில் ஆயுள் கால உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் நான் 2006 முதல் டப்பிங் யூனியனில் உறுப்பினராக இருக்கிறேன். இப்போது புதிய உறுப்பினராக ஆக்கப்படும் நிலை உள்ளது.

டப்பிங் யூனியனிடம் மன்னிப்பு கேட்க நிர்ப்பந்திக்கப்படுகிறேன். யூனியனில் உறுப்பினராக விதிப்படி, ரூ.2,500 செலுத்த வேண்டும். ஆனால்  நான்  ரூ.1½  லட்சம் செலுத்த வேண்டும் என்று சொல்வதற்கான காரணம்  புரியவில்லை.’’

இவ்வாறு சின்மயி கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகள்