நயன்தாரா அழகை புகழ்ந்த குஷ்பு

அஜித்குமார்-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

Update: 2019-01-03 22:38 GMT
இந்த படத்தின் டிரெய்லரை சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் அஜித் பேசிய வசனங்களும், அதிரடி சண்டை காட்சிகளும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து உற்சாகப்படுத்தின.

“வாழ்க்கையில் ஒரு தடவை அழாத பணக்காரனும் இல்லை. ஒரு தடவை சிரிக்காத ஏழையும் இல்லை. என் கதையில் நான் வில்லன்டா. ஏறி மிதிச்சேன்னு வை ஏரியா வாங்குறது இல்ல, மூச்ச கூட வாங்க முடியாது. பேரு தூக்கு துரை, தேனி மாவட்டம், ஊர் கொடுவிழா பட்டி, மனைவி நிரஞ்சனா, பெண் பெயர் சுவேதா. ஒத்தைக்கு ஒத்தை வாடா” என்று அஜித் பேசும் வசனங்கள் டிரெய்லரில் இருந்தன.

டிரெய்லரில் நயன்தாராவை பார்த்து நீங்க பேரழகு என்று அஜித் வர்ணிக்கும் வசனமும் இடம்பெற்றது. நடிகை குஷ்பு, டிரெய்லரை பாராட்டி உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறும்போது, “விஸ்வாசம் டிரெய்லரை பார்த்து எனக்கு வார்த்தையே வரவில்லை. எனது ஜார்ஜ் க்ளூனி தல படத்துக்கு விஸ்வாசமாக போகலாம். நயன்தாரா டிரெய்லரில் அழகாக இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

மங்காத்தா படத்தில் இருந்து அஜித்குமாரை ஜார்ஜ் க்ளூனி என்றுதான் குஷ்பு அழைத்து வருகிறார். விஸ்வாசம் படத்தையும், நயன்தாராவையும் குஷ்பு பாராட்டியதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்