கமல்ஹாசன்-சித்தார்த்துடன் 8 நாடுகளில், ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு

பிரமாண்ட டைரக்டர் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டு முதல்கட்ட படப்பிடிப்பை விறுவிறுப்புடன் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.

Update: 2019-01-27 23:39 GMT
படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.


படத்தில், கமல்ஹாசனின் மகனாக சித்தார்த் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ‘இந்தியன்’ முதல் பாகத்தில் சேனாதிபதி, சந்துரு என இரண்டு கதாபாத்திரங்களில் கமல்ஹாசன் நடித்த நிலையில், சந்துரு கதாபாத்திரத்தின் மகனாக சித்தார்த் வருவதாக பேசப்படுகிறது.

காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அனிருத் இசையில், லைகாவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு உலகின் 8 நாடுகளில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்