பிரபுதேவா படத்தின் சண்டை காட்சியை சீனாவில் படமாக்கியது ஏன்?

பிரபுதேவா நடித்துள்ள ‘யங் மங் சங்’ படத்தில், அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து இருக்கிறார்.

Update: 2019-03-05 12:09 GMT
பிரபுதேவாவின் தந்தையாக தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜியின் தந்தையாக சித்ராலட்சுமணன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் கும்கி அஸ்வினும் சேர்ந்து சீனாவுக்கு போய் குங்பூ சண்டை கற்றுக் கொள்வது போல் ஒரு காட்சி, படத்தில் இடம்பெறுகிறது.

அந்த காட்சியை படமாக்கியது பற்றி கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்துள்ள அர்ஜுன் எம்.எஸ். கூறியதாவது:-

“பிரபு தேவா, ஆர்.ஜே.பாலாஜி ஆகிய இருவாரும் குங்பூ சண்டை காட்சியை சீனாவில் டெங் லெங் என்ற இடத்தில் படமாக்கினோம். இதற்காக அங்கு பிரத்யேகமாக அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.

1980-களில் நடைபெறுவது போல் கதைக்களத்தை கொண்ட படம் இது. குங்பூ மற்றும் சைனீஸ் ஸ்டண்ட் பற்றிய காட்சிகளை கொண்ட படம் என்பதால், அதிக சிரத்தை எடுத்து படமாக்கினோம். படத்தில், காளி வெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து ஆகிய மூன்று பேரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘பாகுபலி’ வில்லன் பிரபாகர், இந்த படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

அம்ரீஷ் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். படத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.”

மேலும் செய்திகள்