சர்ச்சை காட்சிகளுக்கு தணிக்கை குழு எதிர்ப்பு: விஜய் சேதுபதி படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்

விஜய் சேதுபதி படத்தின் சர்ச்சை காட்சிகளுக்கு தணிக்கை குழு எதிர்ப்பு தெரிவித்ததுடன், படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கினர்.

Update: 2019-03-26 22:47 GMT

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடம் ஏற்றுள்ளார். இதில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி ஆகியோரும் உள்ளனர். சமந்தா கதாபாத்திரம் வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் கூறும்போது, “சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து கணவரிடம் சொன்னபோது என்னை அதிர்ச்சியாக பார்த்தார் என்றார். ரம்யாகிருஷ்ணனும் சர்ச்சை கதாபாத்திரத்தில் வருகிறார். படத்தை தியாகராஜன் குமாரராஜா டைரக்டு செய்துள்ளார்.

விஜய் சேதுபதியின் திருநங்கை தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் டீலக்ஸ் படத்தை தணிக்கை குழுவுக்கு படக்குழுவினர் அனுப்பி வைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் சர்ச்சை காட்சிகள் இருப்பதை சுட்டிக்காட்டி ‘யூ’ மற்றும் ‘யூஏ’ சான்றிதழ் தரமுடியாது என்று மறுத்துவிட்டனர்.

அதற்கு மாறாக ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் படத்தை 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தொலைக்காட்சிகளிலும் இந்த படத்தை ஒளிபரப்ப முடியாது. தியாகராஜ குமாரராஜா ஏற்கனவே இயக்கிய ஆரண்ய காண்டம் படமும் ‘ஏ’ சான்றிதழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் திரைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்