சஞ்சய்காந்தி வாழ்க்கை சினிமா படமாகிறது

நடிகர்-நடிகைகள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் வாழ்க்கையை படமாக்கும் போக்கு திரையுலகில் அதிகரித்து வருகிறது.

Update: 2019-05-06 21:30 GMT
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை படம் சமீபத்தில் வெளியானது. முன்னாள் முதல்-மந்திரிகள் என்.டி.ராமராவ், ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை படங்களான எடுக்கப்பட்டு திரைக்கு வந்தன.

நடிகர் சஞ்சய் தத், நடிகைகள் சாவித்திரி, சில்க் சுமிதா ஆகியோரின் வாழ்க்கையும் சினிமா படமாக வெளியானது. இதுபோல் விளையாட்டு வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், தோனி ஆகியோர் வாழ்க்கை படமாக வெளிவந்த நிலையில் இப்போது பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோரின் வாழ்க்கையும் படமாகிறது.

பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையையும் படமாக எடுத்து வருகிற 24-ந் தேதி திரைக்கு கொண்டு வருகிறார்கள். ஜெயலலிதா வாழ்க்கையும் படமாகி வருகிறது. இந்த நிலையில் சஞ்சய் காந்தியின் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி.

இவர் 1980-ம் ஆண்டு விமான விபத்தில் உயிர் இழந்தார். இவரது வாழ்க்கை கதையை பிரபல இந்தி தயாரிப்பாளரான ஏக்தா கபூர் சினிமா படமாக எடுக்கப்போவதாக அறிவித்து உள்ளார். இந்த படத்துக்கு ‘தி பிரின்ஸ்’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் சஞ்சய்காந்தி வேடத்தில் இந்தி நடிகர் அக்‌ஷய் கன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்