ஹாலிவுட் நடிகை டோரிஸ் டே மரணம்

ஹாலிவுட் நடிகை டோரிஸ் டே உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.

Update: 2019-05-14 22:00 GMT
பழம்பெரும் ஹாலிவுட் நடிகை டோரிஸ் டே. இவருக்கு சிறுவயதிலேயே நடன கலைஞராக பணியாற்ற ஆசை இருந்தது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் கார் விபத்தில் சிக்கி அவரது கால் எலும்பு முறிந்தது. இதனால் 15 வயதில் பாடகியானார். அதன்பிறகு ஹாலிவுட் படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

1948–ம் வருடத்தில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். தொடர்ந்து 20 ஆண்டுகள் 35–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ராக் ஹட்சனுடன் இணைந்து நடித்த பில்லோ டாக், லவ்வர் கம் பேக், செண்ட் மீ நோ பிளவர்ஸ் ஆகிய படங்கள் அந்த காலத்தில் ரசிகர்களை கவர்ந்தன. பில்லோ டாக் படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 

ஆனால் விருது கிடைக்கவில்லை. டெல்பெர்ட்மன் இயக்கிய ‘தேட் டச் ஆப் மிங்’ மற்றும் ‘த மேன் ஹூ நிஊ டூ மச்’ ஆகிய படங்கள் டோரிஸ் டேவை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது. ஏராளமான டி.வி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். டோரிஸ் டே கலிபோர்னியாவில் வசித்து வந்தார். 

சமீபத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி  மரணம்  அடைந்தார். அவருக்கு வயது 97. டோரிஸ் டே மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் –நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்