துணை இயக்குனரான நடிகை அனுபமா பரமேஷ்வரன்

நடிகை அனுபமா பரமேஷ்வரன் துல்கர் சல்மான் தயாரிக்கும் படம் ஒன்றில் துணை இயக்குனராக பணிபுரிகிறார்.

Update: 2019-05-29 12:06 GMT
மலையாளத்தில் 'பிரேமம்' அறிமுகத்திற்குப்பின் ஒன்றிரண்டு மலையாள படங்கள், தெலுங்கு படங்களில் நடித்த அனுபமா பரமேஷ்வரன் தமிழில் 'கொடி' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். 

தற்போது துல்கர் சல்மானின் முதல் சொந்தத் தயாரிப்பான பெயரிடப்படாத படம் ஒன்றில்  கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து கொண்டே உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி இருப்பதாவது;-

துல்கரின் முதல் தயாரிப்பான இப்படத்தில் ஷம்சு சாய்பா இயக்கத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிவதை பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த படக்குழுவை மிகவும் நேசிக்கிறேன். ஒரு படத்தின் வளர்ச்சியை ஒவ்வொரு அங்குலமாக கூட இருந்து தரிசிப்பது புது அனுபவமாக இருக்கிறது. அடுத்தடுத்த தகவல்களுக்கு அப்டேட் செய்கிறேன்' என்று பதிவிட்டிருக்கிறார்.


மேலும் செய்திகள்