ஜெய்யின் 25-வது படத்தில் கார்த்தி, விஜய்யான சுவாரஸ்யம்

லவ் மேட்டர் என்ற புதிய படத்தில் நடிகர் ஜெய் நடிக்கிறார். இது அவரின் 25-வது படமாகும்.

Update: 2019-05-31 14:18 GMT
சென்னை-28, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, நீயா-2 உள்பட பல வெற்றி படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது இவர் லவ் மேட்டர் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் வைபவி (இருட்டு அறையில் முரட்டு குத்து கதாநாயகி) அதுல்யா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது. தனது 25-வது படம் பற்றி ஜெய் கூறியதாவது:-

``துரு, துரு, ஜாலி சுவாரஸ்யம் கலந்து லவ்மேட்டர் திரைப்படம் எனது 25 வது படமாக அமைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. பல வெற்றிப்படங்களை தந்தது மட்டுமல்லாமல், நடிகர் விஜய்யை வைத்து பல இளமை ததும்பும் படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம், இது.

ரஜினி, விஜயகாந்த், விஜய்யை வைத்து அவர் இயக்கி வெற்றி பெற்ற படங்களில் கதாநாயகர்களின் பெயர் விஜய். எனவே லவ் மேட்டர் படத்தில் கார்த்தி என்ற எனது கதாபாத்திரத்தை விஜய் என்று வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் அதற்கு சந்தோஷமாக சம்மதித்தார்.’’

மேலும் செய்திகள்