தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல... திருத்தப்பட்டது வரைவு அழகிய தீர்வு - ஏ.ஆர்.ரஹ்மான்

மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக்கும் அம்சம் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் நீக்கப்பட்டுள்ளதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-03 12:33 GMT
சென்னை,

இந்தியை கட்டாயமாக்குவதற்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் என்பதற்கு பதிலாக மூன்றாவது மொழியாக இந்திக்கு பதில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில், மத்திய அரசின் முடிவு அழகிய தீர்வு என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் ஒரு ரோஜாப்பூவின் படத்தையும், தேசியக்கொடியின் படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்