மலை கிராமத்துக்கு சென்ற ``4 கில்லாடிகள்'' என்ன ஆனார்கள்?

``சென்னையை சேர்ந்த 4 இளைஞர்கள் ஒரு மலை கிராமத்துக்கு சுற்றுப் பயணமாக சென்றார்கள். அங்கு அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களை கருவாக வைத்து, ``4 கில்லாடிகள்" என்ற படம் தயாராகி வருகிறது.

Update: 2019-06-20 21:30 GMT
``4 கில்லாடிகள்" ஒரு தமிழ் தேசிய குறியீட்டு படமாக உருவாகி வருகிறது" என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் ராஜமோகன். படத்தின் கதையை ராஜமோகன், சிவக்குமார் ஆகிய இருவரும் எழுத, திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ராஜமோகன். இவர், ``குங்குமபூவும் கொஞ்சும் புறாவும்," ``வானவராயன் வல்லவராயன்," ``ருக்குமணி" ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். இவர் மேலும் கூறியதாவது:-

``உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ``4 கில்லாடிகள்" படம் உருவாகி வருகிறது. இசக்கி பரத், தியா, டேனியல், தம்பி ராமையா, ஏ.வெங்கடேஷ், ``காதல்" சரவணன், ``மெட்ராஸ்" நந்தகுமார், டைரக்டர் நாகேந்திரன், தீப்பெட்டி கணேசன், ஹரி தினேஷ், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

முதல் கட்ட படப்பிடிப்பு தேனி, இடுக்கி, பெரியகுளம், மூணாறு ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது. இறுதிகட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். இது, வழக்கமான காதல் கதை அல்ல. சமூகம் சார்ந்த பிரச்சினையை சொல்லும் படம்."

மேலும் செய்திகள்