ஹிட்லரின், ‘நீர்முள்ளி’

‘நீர்முள்ளி’ என்பது வயல்வெளிகளில் காணப்படும் ஒரு முள் செடி. அதை அகற்றுவது என்பது சிரமம். முள் குத்திவிடும்.

Update: 2019-06-28 11:36 GMT
ஆனால், அதன் மருத்துவ குணங்கள் அதிகம். அதுபோல்தான் பெண்களும் சிறு தவறுகளை உணர்ந்து கொண்டு நடந்தால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதனால்தான் எங்கள் படத்துக்கு, ‘நீர்முள்ளி’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம் என்கிறார், படத்தின் டைரக்டர் ஹிட்லர் ஜே.கே. இவரே படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, கதாநாயகனாகவும் நடிக்கிறார், கதாநாயகி, சுமா பூஜாரி.

ரேகா, பொன்னம்பலம், வாகை சந்திரசேகர், இமான் அண்ணாச்சி, நளினி ஆகியோரும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் டைரக்டர் அகத்தியன் நடிக்கிறார்.

‘‘இன்றைய சூழ்நிலையில், சமுதாயத்தில் பெண்கள் தங்களை சார்ந்த ஆண் உறவுகளை எப்படி கையாள்கிறார்கள்? அதன் மூலம் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள்? என்பதே இந்த படத்தின் திரைக்கதை. இந்த வகையில், `நீர்முள்ளி' பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்’’ என்றும் கூறுகிறார், டைரக்டர் ஹிட்லர் ஜே.கே.

மேலும் செய்திகள்