நான் நடிகை வனிதாவின் 3-வது கணவரா? நடிகர் ராபர்ட் விளக்கம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருப்பவர் நடிகை வனிதா.

Update: 2019-07-10 00:39 GMT
நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 2000-ம் ஆண்டு நடிகர் ஆகாசை மணந்து பின்னர் அவரை விவாகரத்து செய்தார்.

தெலுங்கானாவை சேர்ந்த ஆனந்தராஜை 2007-ல் 2-வது திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அதன்பிறகு ‘எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல்’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தில் நடன இயக்குனர் ராபர்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

அப்போது இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டது. தற்போது ஆனந்தராஜ் தனது குழந்தையை வனிதா கடத்திவிட்டதாக அளித்த புகாரின் பேரில் தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் அரங்கில் சென்று விசாரித்ததன் மூலம் வனிதா மீண்டும் பரபரப்பாகி உள்ளார்.

அவரது 3-வது கணவர் ராபர்ட் என்று சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவுகின்றன. இதற்கு விளக்கம் அளித்து ராபர்ட் கூறியதாவது:-

“வனிதாவுடன் இணைந்து ஒரு படத்தை தயாரித்தேன். அந்த படத்தில் நடிக்கவும் செய்தேன். படத்தை விளம்பரப்படுத்துவதற்காக என்னை காதலிப்பதுபோல் வனிதா தவறான தகவலை பரப்பினார். இது மோசடித்தனம். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது படத்தின் விளம்பரத்துக்காக செய்தேன். பொறுத்துக்கொள் என்றார். என்னை அவரது 3-வது கணவர் என்று சொல்வது வருத்தம் அளிக்கிறது.” இவ்வாறு ராபர்ட் கூறினார்.

இந்தநிலையில் வனிதா பெயரை ராபர்ட் கையில் பச்சை குத்தியுள்ள புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்