நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை

கதாநாயகர்களுக்கு மட்டுமே ரசிகர் பட்டாளமும், ரசிகர் மன்றங்களும் இருக்கும் என்ற நிலை மாறி சமீப காலமாக கதாநாயகிகளுக்கும் ரசிகர்கள் படை திரள்கிறது. அவர்கள் நடிக்கும் படங்கள் திரையரங்குகளில் அமோகமாக ஓடுகின்றன.

Update: 2019-07-24 00:00 GMT
தயாரிப்பாளர்கள், நடிகர்களை சுற்றுவதை விட்டு நடிகைகளை தேட ஆரம்பித்துள்ளனர். இந்த பட்டியலில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். 

ஆரம்பத்தில் முன்னணி கதாநாயகர்கள் படங்களில் டூயட் பாடி வந்த அவர் இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்கிறார். அவரது மாயா, அறம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்து கொலையுதிர் காலம் திரைக்கு வருகிறது.

நயன்தாரா படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம், போஸ்டர்கள் ஒட்டியும் கட்-அவுட்டுகள் வைத்தும் ரசிகர்கள் அமர்க்களப்படுத்துகிறார்கள். இதுபோல் அனுஷ்காவுக்கும் தனி ரசிகர் படை உருவாகி இருக்கிறது. அருந்ததி படத்தில் நடித்தபோது அவருக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்து இல்லை. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு உயர்ந்த நிலைக்கு போனார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அவருக்கு குவிகின்றன. அனுஷ்கா படங்களை ரூ.30 கோடி வரை முதலீடு செய்து எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வருகிறார்கள். இப்போது சமந்தாவை முதன்மைப்படுத்தி வந்த ஓ பேபி தெலுங்கு படம் வெற்றி பெற்றதால் அவருக்கும் தனி ரசிகர் வட்டாரம் உருவாகி இருக்கிறது. ஐதராபாத்தில் அவருக்கு கட்-அவுட்டும் வைத்துள்ளனர்.

இதுபோல் கேம் ஓவர் படத்துக்கு பிறகு டாப்சிக்கும் தனி மார்க்கெட் உருவாகி உள்ளது. இதுபோல் நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு கீர்த்தி சுரேசுக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 2 கதைகள் தயாராக உள்ளன. காஜல் அகர்வால், தமன்னாவுக்கும் நல்ல மார்க்கெட் இருக்கிறது.

மேலும் செய்திகள்