பேனர் வைப்பதை தவிர்ப்பது நல்லது - நடிகர் சிவகார்த்திகேயன்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

Update: 2019-09-26 23:00 GMT
“நம்ம வீட்டுபிள்ளை அண்ணன்-தங்கை உறவை பற்றிய கதை. சமுத்திரக்கனி எனது அப்பாவாகவும், பாரதிராஜா தாத்தாவாகவும், வேல ராமமூர்த்தி பெரியப்பாவாகவும் வருகிறார்கள். குடும்ப பிரச்சினைகள், பொருளாதாரத்தை பார்த்துக்கொண்டு உறவுகளை பாதுகாக்கும் பிள்ளைகளை பற்றி படம் பேசும்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாக வருகிறார். பாரதிராஜாவுடன் நடித்தது இனிமையான அனுபவம். நிறைய இடங்கள் கிழக்கு சீமை, பாசமலர் படங்களை ஞாபகப்படுத்தும். எங்க வீட்டு பிள்ளை தலைப்பை நாங்கள் கேட்கவே இல்லை. 32 கதாபாத்திரங்கள் படத்தில் உள்ளன. பாரதிராஜா பெரிய இயக்குனர் என்ற ஈகோ இல்லாமல் அன்போடு பழகினார்.

அவர் படப்பிடிப்புக்குள் வரும்போதே எல்லோருக்கும் எனர்ஜி வரும். எனது கனா படத்தை மிகவும் பாராட்டினார். கனா படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேசுக்கு தேசிய விருது கொடுத்து இருக்கலாம். எனது படம் ரிலீசாவதையொட்டி பேனர் வைக்க கூடாது என்ற வேலையை ரசிகர்கள் தொடங்கி விட்டனர்.

பேனரால் சில அசம்பாவிதங்கள் நடக்கும்போது அதை தவிர்த்து விடுவது நல்லது என்பது எனது கருத்து. இந்த படத்தில் நடித்ததன் மூலம் கூட்டு குடும்பத்தின் மகத்துவம் புரிந்தது.

அடுத்து ஹீரோ படம் டிசம்பரில் வெளியாகிறது. அதன்பிறகு ரவிகுமார் படத்தில் நடிக்கிறேன். விக்னேஷ் சிவன், நெல்சன் படங்களிலும் நடிக்க இருக்கிறேன்.

இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.

மேலும் செய்திகள்