வலைத்தள புகைப்படங்கள் நீக்கம் - நடிகை கஸ்தூரி எதிர்ப்பு

வலைத்தள புகைப்படங்களை நீக்கத்திற்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-23 23:31 GMT

தமிழ் பட உலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த கஸ்தூரி தற்போது அரசியல், சமூக விஷயங்கள் குறித்து அடிக்கடி பேசி பரபரப்பாக இருக்கிறார். டுவிட்டரில் சர்ச்சை கருத்துக்களை பதிவிடுகிறார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் வருகின்றன. ஆனாலும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறார்.

விரைவில் அரசியல் கட்சியொன்றில் இணையப் போவதாகவும் தகவல் பரவியது. இதனை மறுத்த கஸ்தூரி தனக்கு அரசியல் கட்சிகளில் சேர அழைப்பு வருகின்றன. அதில் எனக்கு விருப்பம் இல்லை என்றார். தற்போது கஸ்தூரி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படமும் அதன் கீழே பதிவிட்ட கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இன்ஸ்டாகிராம் நிர்வாகம் விதிமுறைகளை மீறும் வகையில் கஸ்தூரியின் புகைப்படங்கள் இருப்பதாக சொல்லி அவற்றை நீக்கிவிட்டது. தனது புகைப்படங்களை நீக்கியதற்கு கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் வெளியிட்ட விதிமீறல் விளக்கத்தையும் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறும்போது, எனது புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் இருந்து அடிக்கடி நீக்கப்படுகின்றன. இன்ஸ்டாகிராம் விதிமுறையை நான் மீறி விட்டதாக காரணம் சொல்கிறார்கள். இந்த புகைப்படத்தில் விதி மீறல் எங்கே இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் விமர்சிப்பவர்கள் வலைத்தளத்தில் என்னை பின்தொடராத வகையில் தடை செய்து விடுவேன் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்